குரூப்1 தேர்வில் ஓஎம்ஆர் விடைத்தாள்களை மாற்ற முடியாதபடி நடவடிக்கை : டிஎன்பிஎஸ்சி தலைவர்…

3 January 2021, 11:18 am
TNPSC - Updatenews360
Quick Share

கோவை : தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு கோவையில் இன்று துவங்கியது.

கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் 40 தேர்வுக் கூடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 887 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இதற்காக 40 கண்காணிப்பாளர்கள், 9 நடமாடும் கண்காணிப்பாளர்கள், 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் முக கவசம் அணிதலும், தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு கிருமிநாசினி பயன்படுத்துதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையத்திற்குள் காலை 9.30மணிக்கு தேர்வர்கள் சென்றுவிட்டனர். தேர்வு மையங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வர்கள் பால்பாயிண்டு பேனாக்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும் விதமாக தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தேர்வு எழுதுவோர் அதிகாரிகளின் கண்காணிப்பில் தேர்வினை எழுத தொடங்கினர்.

மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், குரூப் -1 தேர்வில் ஓஎம்ஆர் விடைத்தாள்களை மாற்ற முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Views: - 49

0

0