சரத்குமார் – ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு : செக் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு

7 April 2021, 1:13 pm
sarath kumar - radhika - updatenews360
Quick Share

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவும் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த ரேடியண்ட் நிறுவனம் சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தனர்.

Views: - 14

0

0