நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகார் : உடனே நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள்!! என்னா வேகம்…

24 June 2021, 8:04 pm
Nivetha Pethuraj - Updatenews360
Quick Share

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் எதிரொலியாக உணவு சப்ளை செய்த ஓட்டல் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் நடிகர்கள் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்று இவர் ஸ்விகி செயலி மூலம் சென்னை பெருங்குடி பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்நிலையில் நிவேதாவின் புகார் அடிப்படையில், உணவு சப்ளை செய்த மூன்லைட் ஓட்டல் செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

3 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்தி செய்து புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் ஓட்டலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகை புகார் கொடுத்த 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், ஓட்டலில் 10 கிலோ பழைய இறைச்சியை பறிமுதல் செய்து அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Views: - 238

8

0