மதுரையில் கூகுள் மீட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டம்….!!

13 October 2020, 4:49 pm
collcetor meet -updatenews360
Quick Share

கொரோனா காரணமாக விவசாய குறை தீர்ப்பு கூட்டம் கூகுள் மீட்டில் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

மதுரை மாவட்ட விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதமாக விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை.

இதனால் விவசாயிகள் தங்களுடைய குறைகள், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். விவசாய பணிகள் நடைபெறுவதால் மாதாந்திர விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் கூகுள் மீட் இணைய வழியே விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் 13 வட்டார வேளாண் அலுவலகத்தில் இருந்து இணைய வழியில் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் உரங்கள் வாங்கினால் உரிய ரசீது கொடுப்பதில்லை, நீர் வரத்து வாய்காலை சரி செய்து நீர் வீணாவதை தடுக்க வேண்டும், விவசாய பணிகள் காலகட்டத்தில் தாமதன்றி கடன்கள் வழங்க வேண்டும், ஒரு போக சாகுபடி விவசாய பணிகளுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Views: - 55

0

0