அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாள் விழா : ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை!!

17 January 2021, 1:36 pm
CM Mgr Tribute - Updatenews360
Quick Share

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மாலை அணிவிது மரியாதை செலுத்தினர்.

மக்கள் மனதில் என்றும் வாழும் நடிகரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104வது பிறந்தநாள இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவர்களுடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து அதிமுவின் கட்சி கொடியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஏற்றி வைத்தனர். பின்னர் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

Views: - 10

0

0