படகில் போனாலும் ராக்கெட்டுல போனாலும் அதிமுக சாதனையை மறைக்க முடியாது : ஆர்பி உதயகுமார்

22 November 2020, 1:45 pm
Udayakumar - Updatenews360
Quick Share

மதுரை : உதயநிதி படகில் போனாலும், ராக்கெட்டில் போனாலும் அதிமுக அரசின் சாதனையை மறைக்க முடியாது,என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகள் உடனான ஆய்வுக்ககூட்டம் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதையடுத்து மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று அரசின் உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவபடிப்பிற்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் 1லட்சம் ரூபாய் நிதியுதியை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார் :

சென்னை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும், 10ஆண்டுகளில் ஏற்பட்ட அனுபவ அடிப்படையில் அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் , மழை பாதிப்பை சமாளிக்க தங்குமிடங்கள், மருத்துவகுழுக்கள், பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர் எனவும், முதல்வர் எடப்பாடி சமூக நீதி பாதுகாவலராக 7.5சதவித இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

மருத்துவ உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் இல்லை, அரசியல் சாயம் பூச வேண்டாம், தனது சுய சிந்தனையிலயே முதல்வர் இதனை செய்து சாதித்துள்ளார் , திமுக ஆட்சியில் 1945 மருத்துவ இடங்கள் கிடைக்கப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் 3060 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது, 11புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி எடப்பாடி சத்தமில்லா சாதனையாளராக உருவாகியுள்ளார், மாவட்டத்தில் மருத்துவபடிப்பிற்கு தேர்வான மாணவர்களுக்கு அதிமுக சார்பில் அன்பின் அடையாளமாக மாணவர்களுக்கு தலா 1லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என கூறிய திமுக குட்டையில் குழப்பத்தை ஏற்படுத்துவது, அரசு பள்ளியில் படித்த மாணவரான முதல்வர் எடப்பாடி அரசு பள்ளி மாணவர்களின் நம்பிக்கையை கொடுத்துள்ளார், காற்றுகூட புகமுடியாத அளவிற்கு குறைவில்லா ஆட்சியை குறையை கண்டுபிடிக்க திமுக முயற்சிக்கிறது.

மருத்துவ இடங்களுக்கு தேர்வான மாணவர்கள் செய்யகூடிய ஒட்டுமொத்த புண்ணியமும் முதல்வருக்கே சேரும் ,அதனை பங்கீட யாருக்கும் உரிமை இல்லை, பாரத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளோம், திமுகவின் அறிக்கை பெரியதா? முதல்வர் எடப்பாடியின் அரசாங்கம் பெரியதா ? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அறிக்கை யார் வேண்டுமானாலும் விடலாம் சமூக சீர்திருத்ததிற்கான சிந்தனை தான் மருத்துவ உள் இட ஒதுக்கீடு, திமுக முழு சோற்றில் பூசணியை அல்ல யானையவே மறைக்க நினைக்கின்றனர், அமித்ஷா வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று கூறியுள்ளார்.

தந்தையை தொடர்ந்து மகனும் வீதி வீதியாக செல்கிறார் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்றார். ஸ்டாலினின் உதயநிதி படகில் போனாலும், ராக்கெட்டில் போனாலும் 4ஆண்டுகளில் 40ஆண்டுகள் சாதனையை செய்த முதல்வர் எடப்பாடியின் சாதனையை மறைக்க முடியாது என்றார்.

Views: - 19

0

0