மதுரையில் 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உறுதி!!

2 July 2021, 3:42 pm
Rajan Chellappa - Updatenews360
Quick Share

மதுரை : 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உறுதியளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அத்தொகுதியின் எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கோரிக்கை ஒன்றை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா கூறுகையில்திருப்பரங்குன்றம் தொகுதியில் 13 வார்டுகள் மாநகராட்சி பகுதிகளில் வருகிறது, 13 வார்டுகளில் சாலை, மின்சாரம், பாதாள சாக்கடை ஆகிய வளர்ச்சி பணிகள் செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளேன், தமிழக அரசு கொரோனா கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என சொல்லி தான் வாக்கு சேகரித்து வெற்றி பெற்றேன், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான தொடக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

3 ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டி முடிக்கப்படும், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தோப்பூர் அரசு மருத்துவமனை அல்லது வடபழஞ்சி ஐ.டி பூங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும், தனியார் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என கூறினார்.

Views: - 103

0

0