முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…!!!

Author: kavin kumar
10 August 2021, 10:18 pm
Quick Share

சென்னை: சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு பின் வெளியே வந்த எம்எல்ஏ எஸ்பி வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான 35 இடங்களிலும், தமிழகம் முழுவதிலும் சேர்த்து மொத்தம் 52 இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் மாலை வரை சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்சு ஒழிப்புத்துறையினர் சோதனை நடப்பதை அறிந்த தொண்டர்கள், அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

சுமார் 12 மணிநேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில் பெட்டகச் சாவி மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், வேறு ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சான்றழித்து விட்டுச் சென்றுள்ளனர்.இதனிடையே, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ எஸ்பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையும் நிறைவடைந்தது. இதையடுத்து வெளியே வந்த எம்எல்ஏ எஸ்பி வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Views: - 304

0

0