ஆபாச வீடியோ அனுப்பினால் ‘அரபு‘ நாட்டின் ‘அந்த‘ தண்டனை : அரிவாளுடன் மிரட்டும் வீரலட்சுமியின் வீடியோ!!

17 July 2021, 10:57 am
Woman Threatening - Updatenews360
Quick Share

சென்னை : ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு அரபு நாட்டின் அந்த தண்டனை வழங்கப்போவதாக பெண் ஒருவர் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

சென்னை ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி என்பவர் தமிழகர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனராக உள்ளார். சமீபத்தில் மேகதாது அணை விவகாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய போது தனக்கு ஆபாச வீடியோ வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், இனி தானே களத்தில் இறங்கி குற்றவாளிகளை வதம் செய்ய உள்ளதாக கையில் அரிவாளுடன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீரலட்சுமி.

தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர்கள் 15 நாட்களில் காவல்நிலையத்தில் சரணடையாவிட்டால் அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் அந்த மாதிரி ‘பனீஷ்மென்ட்டை‘ தானே கொடுக்க உள்ளதாக பீதியை கிளப்பியுள்ளார்.

இன்னும் 15 நாட்களில் சரணடையாவிட்டால் நானே குற்றவாளிகளை தண்டித்துவிடுவேன் என்றும், அந்த தண்டனைக்காக தனக்கு வீரதீர செயல்களுக்கான விருதை வழங்க வேண்டும் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் நீதிமன்றத்தில் பணம் செய்து நீதியை பெற்று கொள்ள முடியும் அளவுக்கு பண பலம், அரசியல் பலம், படை பலம் உள்ளதாகவும், ஆனால் சாதாரண தமிழ் பெண்ணுக்கு எப்படி நீதிகிடைக்கும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 221

0

0