மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்ததை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி : கோவையில் பரபரப்பு!!

20 November 2020, 12:17 pm
Lady Support Stalin - Updatenews360
Quick Share

கோவை : திமுக தலைவர் முக ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்து கோவையில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில், அதில் ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படங்களுடன், “ஊரடங்கில் அயராது உழைத்தவரா? ‘விக்’ மாட்டியவரா? என்றும், மற்றொரு சுவரொட்டியில் விவசாயிகளுக்காக “டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா?” என்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனை பார்த்த திமுக தொண்டர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், ஸ்டாலினை கிண்டல் செய்ததை கண்டித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக.,வை சேர்ந்த சித்ரகலா என்பவர் தீக்குளிக்க முயன்றார். மேலும், ஆணையர் அலுவலகம் முன்பு திடீரென கோஷங்களை எழுப்பினார .

இதனை தொடர்ந்து அவரை தடுத்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்து வருகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக இருந்த நேரத்தில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தீக்குளிக்கும் போராட்டத்தை நடத்தியதால் ஆணையர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 18

0

0