அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 24 காளைகளை அடக்கி கார்த்திக் முதல் பரிசை தட்டிச் சென்றார்..!!

Author: Aarthi Sivakumar
14 January 2022, 6:08 pm
Quick Share

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும். இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது.

அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு ஜல்லிகட்டு போட்டியை ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்கள்.

ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன.

போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். போட்டியில் கலந்து கொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிசீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு,ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது.

6 சுற்றுகள் நிறைவடைந்தது. மொத்தம் 523 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். வலையங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது பரிசை பெற்றார். 11 காளைகளை அடக்கி பரத் என்பவர் 3ம் பரிசை தட்டிச் சென்றார்.

Views: - 199

0

0