திருப்பூரை குறி வைக்கும் வங்கதேசத்தினர்? சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 பேர் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 8:20 pm
Tirupur 7 Arrest -Updatenews360
Quick Share

திருப்பூர் : பெருமாநல்லூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 7 பேரை, பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூரில் வங்கதேச நாட்டை சேர்ந்த பலர் முறைகேடாக உரிய ஆவணங்களின்றி தங்கி வாழ்ந்து வருகின்றனர். அவர்களை போலீஸார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணி செய்து வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேசம் குன்னா மாநிலம் சத்கிரா மாவட்டம் கந்தலியா கிராமத்தை சேர்ந்த மகமதுல் ஹசன்(வயது 21), அதே பகுதியை சேர்ந்த முகமது ராஜூத் ஹீசேன் (வயது 17), ரப்பானி கிராமத்தை சேர்ந்த அஃபுல்காயீர் (வயது 25), ரோத்தன்பூரை சேர்ந்த பாட்ஷா (வயது 20), நிஷல்பூரை சேர்ந்த ஆரிப்ஃபுல் (வயது 23), கொடிமகலை சேர்ந்த அலி ஹூசேன் மாலிக் (வயது 28), முலாகசாவை சேர்ந்த அல்லமின் (வயது 18) ஆகியோரை கைது செய்தனர்.

உரிய ஆவணங்களின்றி ஆண்டுக்கணக்கில் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Views: - 484

0

0