தனியார் மருத்துவமனையை ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்கள்: மருத்துவருக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்கள்…கோவையில் பரபரப்பு!!
Author: Aarthi Sivakumar25 August 2021, 9:09 am
கோவை: தனியார் மருத்துவமனையில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்த வங்கி அலுவலர்கள் நோயாளிகள் திரண்டதால் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனியார் மருத்துவமனையில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்த வங்கி அலுவலர்களை நோயாளிகள் சூழ்ந்து மருத்துவமனை உரிமையாளருக்கு ஆதரவாக திரண்டதால் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு வங்கி அலுவலர்கள் திரும்பி சென்றனர்.
கோவை உப்பிலிபாளையம் சவுரிப்பாளையம் பகுதியில் ரோஸ்லெட் மெடிக்கல் செண்டர் கிளினிக் செயல்பட்டு வருகிறது. மருத்துவர் பிரேம் தேவ் குமார் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் பந்தன் வங்கியில் ரூபாய் 3.5 கோடி கடம் பெற்றுள்ளார். அந்த கடனுக்கான வட்டி தொகையை கொரோனா பேரிடர் காலம் என்பதால் கடந்த 2 மாதங்களாக செலுத்த முடியவில்லை.
கொரோனா காலத்தை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தொழில்துறையினர் செலுத்த வேண்டிய கடனுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்துள்ள நிலையில், மருத்துவர் கடனுக்கான வட்டியை செலுத்தாததால் வங்கி அலுவலர்கள் மருத்துவமனையில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்ததற்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாலை 5 மணி கடந்து ஜப்தி செய்யக்கூடாத என்று நிலையில், 6 மணியை கடந்து வங்கி அலுவலர்கள் வந்தது, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவரது உறவினர்களை வருத்தம் அடைய செய்தது. மருத்துவர் பிரேம் தேவ் குமார் உயர்தர சிகிச்சையை குறைவான செலவில் செய்து தருவதாகவும், மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்ட வங்கி பணியாளர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்பை பதிவு செய்ததை அடுத்து, வங்கி அலுவலர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
0
0