“பிரியாணி வித்து சம்பாதிச்சதெல்லாம் போச்சே“ : 250 சவரன் கொள்ளை!!

23 November 2020, 10:25 am
Vellore Theft - Updatenews360
Quick Share

வேலூர் : பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 250 சவரன் நகைகொள்ளை

வேலூர் மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அம்மா பிரியாணி என்ற பெரிய நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளர் மோகன். இவர் கொசப்பேட்டை நடேசன் முதலி தெருவில் வசித்து வருகிறார்.

இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவமனையில் பார்ப்பதற்காக குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றனர்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 250 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த அவர்கள் வீடு திறந்திருந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ,ஆய்வாளர் லதா ஆகியோர் நேரில் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 250 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 26

0

0