போலீசாரின் சட்டையை பிடித்த பாஜக பிரமுகர் கைது : சில நிமிடங்களில் ஜாமீனில் விடுதலை!!

8 November 2020, 2:41 pm
BJP Arrest - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : திருத்தணியில் பாஜக வேல் யாத்திரையில் எஸ்.பி சட்டையை பிடித்த காஞ்சி மாவட்ட பாஜக நிர்வாகியை கைது செய்து சிறிது நேரத்தில் விட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அனுமதியின்றி பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்கனவே அறிவித்தபடி மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல்யாத்திரை நடத்த துவங்கினர் .

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகனையும் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.

அப்போது மின் இனைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் மண்டபம் வளாகத்தில் திடீரென கோஷமிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர் . இதில் பாஜக மற்றும் காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வமணி என்பவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் சட்டையை பிடித்து இழுத்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் எஸ்.பி சட்டையை பிடித்து தள்ளிய வீடியோவை வைத்து திருத்தணி போலீசார் வழக்கு திவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் ஓம்சக்தி செல்வமணி என்பவரை கைது செய்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட ஓம் சக்தி செல்வமணி பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவருடன் இருந்த 13 பேர் மீதும் பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக திருத்தணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக நிர்வாகியை கைது செய்து சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டு சம்பவம் அப் பகுதியிலும் காவலர்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0