பாஜக முன்னாள் எம்.பி.க்கு கொரோனா : மருத்துவமனையில் சிகிச்சை!!

16 September 2020, 10:47 am
CPR Corona - updatenews360
Quick Share

கோவை : முன்னாள் எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுபாட்டில் இருந்தாலும் பிரபலமானவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.

இந்த நிலையில் கோவையில் அதிமுக மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழலில், கோவையின் முன்னாள் எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 3

0

0