தமிழகத்தில் தனித்து நின்றாலும் பாஜக 60 இடங்களை கைப்பற்றும் : தமிழக பாஜக பொதுச்செயலாளர்!!

5 September 2020, 5:39 pm
KT Ragavan - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்றாலும் கூட 60 இடங்களை வெல்லக்கூடிய நிலையில் உள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாநில பாஜக பொதுச்செயலாளர் கே, டி ராகவன் தலைமையில் விழுப்புரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவன் பேசுகையில் : வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்றாலும் கூட 60 இடங்களை வெல்லக்கூடிய நிலையில் உள்ளதாகவும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர், மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீது மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவின் துணைத்தலைவராக பதவி ஏற்றுள்ள முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி அண்னாமலை பாஜகவில் இணைந்தது பாஜகவிற்கு மிகப்பெரிய பலம் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0