ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கும் பாஜக…! திமுகவுக்கு காத்திருக்கும் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட்

5 August 2020, 9:16 pm
Quick Share

சென்னை: பாஜக பக்கம் இப்போது இருக்கும் எம்எல்ஏ கு.க செல்வத்தின் எம்எல்ஏ பதவி இப்போதைக்கு என்னவாகும் என்று ஒரு பக்கம் இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் திமுகவுக்கு செக் வைக்க பாஜக தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாரும் எதிர்பார்க்கவில்லை… தமிழக அரசியலில் 2 நாட்களாக நிகழும் அதிரடி மாற்றங்கள். திமுகவில் பதவி போட்டிக்காக படையெடுத்த திமுக கலகக்குரலாக மாறி இருக்கும் கு.க. செல்வம் டெல்லியில் பாஜக தலைமையை சந்தித்துவிட்டு அப்படியே தமிழக பாஜக அலுவலகம் வந்தார்.

அவருக்கு படு உற்சாகமான வரவேற்பு அளித்தது தமிழக பாஜக. அனைத்திலும் முக்கிய பங்காற்றியவர் விபி. துரைசாமி என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். இந்த கச்சேரிகள் ஒரு பக்கம் இருக்க, அவர் தமிழகம் வரும் தகவல் அறிந்த திமுக, கு.க.செல்வத்தை சஸ்பென்ட் செய்தது.

MLA kk selvam -- updatenews360

அரசியல் நடவடிக்கைகள் இப்படி ஒரு பக்கம் இருக்க… இனி செல்வத்தின் அரசியல் நகர்வுகள், அவரது எம்எல்ஏ பதவி எப்படி இருக்க போகிறது என்று கேள்விகள் வந்து விழுகின்றன. அதற்கு ஒரு பிளாஷ்பேக்கை முன் வைக்கின்றனர் பாஜகவினர்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலக்கட்டம். அப்போது தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. விஜயகாந்துக்கு எதிராக சொந்த கட்சி எம்எல்ஏக்கள் எதிர்குரல் எழுப்ப, அந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் என்ற அடையாளத்துடன் வலம் வந்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை சற்று அதிகம் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் விஜயகாந்த். அதிருப்தி எம்எல்ஏக்களாக இருந்த அவர்கள் பின்னர் ராசியாகி படிப்படியாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

tn secretariat- updatenews360

அதே காலக்கட்டத்தில் ஓபிஎஸ் உள்பட 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க அவர்களின் பதவிகளை பறிக்க வழக்கு போட்டது திமுக. கடைசியில் முடிவு எடுக்கவேண்டியவர் சபாநாயகர் தான். இந்த நிலையில் கு.க. செல்வம் மீதான சஸ்பென்ட் நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

எந்தவொரு எம்எல்ஏவாக இருந்தாலும், கட்சி மாறினால் அவரது பதவி பறிபோகும். ஆகவே தான் ஜெயலலிதா பாணியில் சட்டசபைக்குள் செல்வத்தை அதிருப்தி எம்எல்ஏவாக வலம் வரச்செய்து திமுகவுக்கு செக் வைப்பது என்ற விஷயத்தை உடைக்கின்றனர் பாஜகவினர்.

Stalin-10-updatenews360

அதாவது அதிருப்தி எம்எல்ஏ என்ற அடையாளத்துடன் திமுகவுக்கு குடைச்சல், இவரை கொண்டே திமுகவின் முக்கியமான, அதிருப்தியான எம்எல்ஏக்களை அடையாளம் கொண்டு கட்சிக்குள் இழுப்பது தான் பாஜகவின் பிளான் என்று விவரிக்கின்றனர் அவர்கள்.

இப்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கையில் வைத்துக் கொண்டே, முரசொலி டிரஸ்ட் விவகாரம், அறிவாலயம், கட்சிக்குள் நடந்த டீலிங் என அனைத்தையும் வெளியில் கொண்டு வந்து திமுகவை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்வது தான் பாஜகவின் பிளான் என்று விளக்குகின்றனர் விஷயம் அறிந்தவர்கள். அனைத்தும் அறிந்த திமுக எப்போது ரியாக்ட் செய்யும் என்பது தான் டஜன்கணக்கில் எழுப்பப்படும் கேள்விகள்….!

Views: - 1

0

0