பொதுமக்களிடம் லஞ்சம் வங்காமல் கட்டட வரைபட அனுமதி.. அதிரடி ஆக்சனில் களமிறங்கிய கோவை மாநகராட்சி ஆணையர்!!

3 July 2021, 11:27 am
Cbe Commissioner - Updatenews360
Quick Share

பொதுமக்களை அலைக்கழிக்காமல் லஞ்சமின்றி கட்டட வரைபட அனுமதி வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்த வலைதளப்பக்கங்கள் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், புகார் சரி செய்தவுடன் அவற்றை போட்டோ ஆதாரமாக வெளியிட வேண்டும் என்றும், உதாரணமாக மின்கம்பம் சீரமைக்ககப்பட்டது என்று பதிலாக கூறாமல், அதற்கான புகைப்படத்தை பதிவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், வாரம் தோறும் ஆய்வு செய்வதாகவும், கட்டட வரைபடி அனுமதி விஷயத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோ டி.சி.ஆர் என்கிற மென்பொருள் தற்போது அப்கிரேட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள், பல்வேறு சங்கத்தினரிடம் இருந்து ஆலோசனைகள் வந்துள்ளன. இரு மென்பொருளில் சிறந்தது அமல்படுத்தப்படும் என்றும், மக்களை அலைக்கழிக்காமல் லஞ்சமின்றி கட்டட வரைபட அனுமதி வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

மாநகராட்சி நிதி நிலைமை குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது, மாநகராட்சியின் வருவாய், கடன், திட்டங்களுக்கு செலவிடம் தொகை தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கூறினார்.

மாதிரி சாலையான டி.பி சாலை குறித்த திட்ட மேலாண்மை ஆலாசனை நிறுவனத்தின் அறிக்கை இன்னும வரவில்லை என்றும், டி.பி ரோட்டில் கேபிள் கொண்டு செல்ல நிலத்துக்குள் தனி கட்டமைப்பு அமைத்திருந்தாலும், வானில் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருப்பதை கட்டமைப்புக்குள் அமைக்க அறவுறுத்தியுள்ளதாகவும், நிறைய இடங்களில் கற்கள் பெயர்ந்துள்ளதால் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

Views: - 140

0

0