சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

By: Udayachandran
14 October 2020, 10:17 am
Accident CCTV- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது கார் மோதும் விபத்து குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் சரவணன்/இவர் மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வேடசந்தூர் அடுத்த சேடப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேடசந்தூர் அருகே காக்கா தோப்பு கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயத்துடன் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் கார் இருசக்கர வாகனத்தின் மோதி அதில் சரவணன் தூக்கி வீசப்படும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சரவணன் கவனக்குறைவால் சென்றதே காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு வழிச் சாலைகளில் கடக்கும் பொழுது நன்கு கவனமாக நிறுத்தி நிதானமாகச் செல்லவேண்டும் என்பதே போலீசாரின் எச்சரிக்கையாக உள்ளது

Views: - 49

0

0