4 மாதத்திற்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் துணைக்குழுவினர் நாளை ஆய்வு

12 January 2021, 12:38 pm
mullai dam - updatenews360
Quick Share

தேனி : முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக்குழு அதிகாரிகள் நாளை ஆய்வு நடத்துகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து ஒவ்வொரு பருவகாலநிலை மாறுபடும் போது, அதிகாரிகள் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு சார்பில் மூவர் மற்றும் கண்காணிப்பு துணைக் குழுக்களை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முல்லைப்பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐவர் குழு ஆய்வு நடத்திய நிலையில், 4 மாத இடைவெளிக்கு பிறகு மத்திய கண்காணிப்பு துணைக்குழு அதிகாரிகள் நாளை ஆய்வு நடத்துகின்றனர். மத்திய துணைக்குழு தலைவர் சரவணக்குமார் தலைமையில் தமிழக அரசு சார்பில் அணையின் செயற் பொறியாளர் சாம் இர்வின் உள்பட இருவரும், கேரள சார்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் பினுபேபி உள்பட 2 பேரும் ஆய்வு நடத்த உள்ளனர்.

Views: - 55

0

0