தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

12 November 2020, 11:09 am
Heavy Rain Alert - Updatenews360
Quick Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், அடுத்த 4 நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு ஆந்திர கடற்கரைக்கும், இலங்கை கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் கீழைக்காற்று வீசுவதால், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai rain 4 - updatenews360

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழக கடற்பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 44

0

0