செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு : நிவாரண முகாம்களுக்கு செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்!!

25 November 2020, 11:18 am
Quick Share

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்படுவதால், முன்னெச்சரிக்கையாக நிவாரண முகாம்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர்‌ வழங்கும்‌ முக்கிய நீர்‌ ஆதாரங்களில்‌ ஒன்றான செம்பரம்பாக்கம்‌ ஏரியின்‌ மொத்த உயரமான 24 அடியில்‌ இன்று 22 அடியை நெறுங்குவதால்‌ ஏரியில்‌ இருந்து பொதுப்பணித்துறை உபரி நீரை இன்று மதியம்‌ 12.00 மணியளவில்‌ ஆயிரம்‌ கனஅடி அளவிற்கு திறக்கப்படுகிறது. இது நீர்வரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்த்தப்படும்‌ என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

எனவே, செம்பரம்பாக்கம்‌ ஏரியின்‌ மிகைநீர்‌ அடையாறு ஆற்றின்‌ வழியே கடலில்‌ கலப்பதால்,‌ ஆற்றின்‌ இருமருங்கிலும்‌ உள்ள தாழ்வான பகுதியில்‌ உள்ள, குறிப்பாக மண்டலம்‌ 10, 11, 12 மற்றும்‌ 13ல்‌ உள்ள கானு நகர், களைப்பள்ளம்‌, திடீர்‌ நகர்‌, அம்மன்‌ நகர்‌, பர்மா காலனி, ஜாபர்கான்‌ பேட்டை, கோட்டூர்புரம்‌, சித்ரா நகர்‌ மற்றும்‌ அடையாறு ஆற்றை ஒட்டிய
தாழ்வான பகுதியில்‌ வசிப்பவர்கள்‌ அருகில்‌ உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில்‌ 169 நிவாரண மையங்கள்‌ தற்போது திறக்கப்பட்டு தயார்‌ நிலையில்‌ உள்ளன.

கட்டுப்பாட்டு அறை எண்கள்‌.

பெருநகர சென்னை மாநகராட்‌சி, ரிப்பன்‌ மாளிகை கட்டுப்பாட்டு அறை
உதவி எண்‌. 044.25384530, 044.25384540.
தொலைபேசி எண்‌… 1913
மண்டலம்‌-10.. 9445190210, மண்டலம்‌ -11 .. 9445190211
மண்டலம்‌-12.. 9445190212, மண்டலம்‌-13 .. 5445190213

Views: - 0

0

0