செங்கல்பட்டு, திருவள்ளூரில் சதத்தை கடந்த கொரோனா : வீரியமடையும் தொற்று…!

26 June 2020, 11:29 am
Tvmalai Corona Test
Quick Share

சென்னை : செங்கல்பட்டு, திருவள்ளூரில் இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 70,779 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் நோய் தொற்று அதிகரித்து வந்தது. தற்போது, மதுரை, ராணிப்பேட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த நிலையில், செங்கல்பட்டில் இன்று மட்டும் 147 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த மாவட்டத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 4,554 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 65 பேர் பலியாகியுள்ளனர்.

இதேபோல, திருவள்ளூரிலும் 169 பேரிடம் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 3,254 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, முன்னெப்போதும் இல்லாத வகையில், நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,509 ஆக இருந்தது. இன்றும் பாதிப்பு எண்ணிக்கை உச்சமாகவே இருக்கும் என தெரிகிறது.