குடியுரிமை போராட்டம்..! சென்னையில் போலீசார் தடியடி..!!

14 February 2020, 10:16 pm
Chennai CCA- updatenews360
Quick Share

சென்னை : சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்து எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.

பலமுறை எச்சரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலையாததால் போலீஸ் தடியடி நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடித்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டம் வெடித்துள்ளது. மதுரை, திருச்சி, தேனி மாவட்டம் போடி மற்றும் திருப்பூரிலும் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.