நாளை முதல் சென்னை சென்ட்ரலில் போக்குவரத்திற்கு அனுமதி!!

26 November 2020, 7:18 pm
chennai police - rain - updatenews360- updatenews360
Quick Share

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரலில் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் குளம் போல தேங்கிக் கிடக்கிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு, அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் சாலை காவல்துறையினரால் முடக்கப்பட்டது. மெரினாவில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், மாநகரப் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.