பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை அங்கேயே அறுக்க வேண்டும்: இயக்குநர் சேரன்..!

6 December 2019, 4:30 pm
Cheran- updatenews360 (8)
Quick Share

சென்னை: பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை அங்கேயே அறுக்க வேண்டும், அந்நொடியே சுட வேண்டும் என இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

உலகின் மிக நீளமான நாடகமாக, 28 மணி நேரம் 34 நிமிடங்கள் 43 வினாடிகளில் மனித உரிமைகள் பற்றிய ஒரு நாடகத்தை நிகழ்த்தி கின்னஸ் சாதனை நிகழ்த்திய காலக்கூறு நாடகக்குழு மாணவிகளுக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இயக்குநர் சேரன்,

சிங்கம் என்பது உட்கார்ந்த இடத்திலிருந்தே சாதிக்கும். ஆனால், சிறுத்தை மட்டுமே ஓடி ஓடி உழைத்து சாதிக்கும். எனவே, நீங்கள் சிங்கப்பெண்கள் அல்ல; சிறுத்தைப் பெண்கள் என்றார். பெண்கள் எதற்கும் பயப்படாமல், நல்லவற்றிற்கு ஆதரவளித்து, தீமைகளுக்கு எதிராக போராடவும் செய்ய வேண்டும். வாழ்வியல் கல்வி நமக்கு மிகவும் அவசியம். அது இருந்தாலே பயம் போய்விடும் எனக் கூறினார்.

தற்போது ஹைதராபாத்தில், பிரியங்கா ரெட்டியை கற்பழித்து கொன்ற 4 கயவர்களை சுட்டுக் கொன்றது மிகவும் சரியான தீர்ப்பு. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை அங்கேயே அறுக்க வேண்டும், அந்நொடியே சுட வேண்டும் எனக் கூறிய சேரன், இத்தகைய விரைவான நீதியை வழங்கிய தெலுங்கானாவை நாம் பாராட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

உண்மையான பெண் சுதந்திரம் என்பது பெண்கள் சாதிப்பதற்கே தவிர மற்றவைக்கு அல்ல. அச்சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய சாதனையைப் புரிந்த மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.