எத்தனை பேரு ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க… விபரத்த சொல்லுங்க : தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

Author: Babu Lakshmanan
13 August 2021, 5:04 pm
TN corona -Updatenews360
Quick Share

சென்னை : தனியார்‌ மருத்துவமனைகளில்‌ கோவிட்‌ தொற்று பாதிப்பால்‌ அனுமதிக்கப்படும்‌ நோயாளிகள்‌ மற்றும்‌ வீடுகளில்‌ தனிமைப்படுத்திக்‌ கொள்ள தனியார்‌ மருத்துவமனைகளால்‌ அறிவுறுத்தப்படும்‌ நபர்கள்‌ குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்‌ என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது :- பெருநகா சென்னை மாநகராட்சியின்‌ சார்பில்‌ கோவிட்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையிலும்‌ கோவிட்‌ மூன்றாம்‌ அலையை தடுக்கும்‌ வகையிலும்‌ பல்வேறு விதமான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்‌ ஒருபகுதியாக தனியார்‌ மருத்துவமனைகளில்‌ சிகிச்சை பெறும்‌ நோயாளிகளின்‌ விவரங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளின்‌ வாயிலாக வீடுகளில்‌ தனிமைப்படுத்திக்‌ கொள்ளும்‌ நோயாளிகளின்‌ விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும்‌ வகையில்‌, தனியார்‌ மருத்துவ மனைகளுடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ அரசு முதன்மைச்‌ செயலாளர்‌/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்‌ ககன்தீப்‌ சிங்‌ பேடி தலைமையில்‌ இன்று ரிப்பன்‌ கட்டட வளாகத்தில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ அரசு முதன்மைச்‌ செயலாளர்‌,பருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது : தனியார்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ ஒரு நபர்‌ மருத்துவரைக்‌ கொண்டு இயங்கும்‌ கிளினிக்குகள்‌ காய்ச்சல்‌, இருமல்‌ மற்றும்‌ சளி போன்ற அறிகுறிகளுடன்‌ வரும்‌ நபர்கள்‌ குறித்த தகவல்களை தெரியப்படுத்துதல்‌ தனியார்‌ மருத்துவமனைகள்‌, சிகிச்சை மையங்கள்‌ மற்றும்‌ பொது மருத்துவம்‌ செய்யும்‌ மருத்துவர்கள்‌ தங்களிடம்‌ சிகிச்சை பெற வரும்‌ நபர்களில்‌ கோவிட்‌ தொற்று அறிகுறி உள்ள நபர்கள்‌ அல்லது கோவிட்‌ தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும்‌ நபர்கள்‌ குறித்த தகவல்களை நாள்தோறும்‌ மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்‌ என 25.05.2021 அன்று ஆணையாளர்‌ அவர்களின்‌ கடிதத்தின்‌ வாயிலாக ஏற்கனவே தனியார்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ கிளினிக்குகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒரு சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நிலையில்‌ தனியார்‌ மருத்துவமனைகளிலிருந்து தொற்று அறிகுறியுள்ள நபர்களின்‌ விவரங்கள்‌ சரிவர தெரியப்படுத்தப்படவில்லை. கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில்‌ தனியார்‌ மருத்துவமனைகள்‌ மற்றும்‌ கிளினிக்குகள்‌ தங்களிடம்‌ வரும்‌ நோயாளிகளின்‌ பெயர்‌, முகவரி மற்றும்‌ தொலைபேசி எண்‌ ஆகிய விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். ‌

Views: - 388

1

0