தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

24 October 2020, 1:32 pm
chennai metrology - updatenews360
Quick Share

தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் 13 தென் மாவட்டங்களில் வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 17

0

0