நாளை முதல் இரவு 9 மணி வரையிலும் மெட்ரோ ரயில் சேவை : சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்..!

9 September 2020, 12:40 pm
chennai metro rail 01 updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் நாளை இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவையில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 6 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 4வது கட்ட தளர்வில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கின.

இதையடுத்து, மெட்ரோ ரயில் இயக்குவதற்கான நேர அட்டவணையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், நாளையில் இருந்து சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப் பேட்டை வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். 9ம் தேதியன்றில் இருந்து புனித தோமையார் மாலை முதல் சென்ட்ரல் வரையிலும், பரங்கிமலை- சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இரவு 8 வரை இயக்கப்படுவதாக இருந்த மெட்ரோ ரயில் சேவை, இரவு 9 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 1

0

0