சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா..! மருத்துவ உலகம் ‘ஷாக்’

22 May 2020, 10:11 pm
Corona_RPT_UpdateNews360
Quick Share

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது, மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி இந்தியாவிலும் தாறுமாறாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி அதிர வைத்துள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இந் நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வருக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Leave a Reply