சாய்பாபா சிலையில் இருந்து தானாக வெளி வந்த திருநீர்!!

31 August 2020, 5:22 pm
Saibaba Statue Wonder - Updatenews360
Quick Share

சென்னை : வீட்டு பூஜை அறையில் வைக்கப்பட்ட சாய்பாபா சிலையின் மேல் இருந்து திருநீறு தானாக வெளி வந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் அசிசி நகர் 4 வது தெருவில் வசிப்பவர் ஜெயந்தி. இவரது கணவர் கால் டாக்சி ஓட்டுனராக உள்ளார். இவர்கள் தனது இரு மகன்களுடன் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சுமார் 10 வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயந்தியின் வீட்டில் பூஜை அறையில் இருந்த 4 அங்குலம் அளவுள்ள சாய்பாபா சிலையில் இருந்து திடீரென திருநீறு கொட்ட ஆரம்பித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூறி தனது வீட்டில் அதிசயம் நடந்து இருப்பதாக கூறி அனைவரையும் அழைத்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காட்டுத் தீ போல பரவியதால் ஜெயந்தியின் வீட்டிற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் சாய்பாபாவின் அற்புதத்தைப் பார்த்து திருநீற்றை பிரசாதமாக வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Views: - 7

0

0