விஜயகாந்த் இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் : நலம் விசாரித்த போது கொரோனா நிதியாக ₹10 லட்சம் வழங்கினார்!!

11 July 2021, 1:05 pm
Stalin Meet Vijayakanth- Updatenews360
Quick Share

சென்னை : விருகம்பாக்கத்தின் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவருடன் திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயகாந்த்திடம் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் முதல்வரிடம், வியாஜயகாந்த் வழங்கியதாக கூறப்படுகிறது.

திமுக, அதிமுக தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அமைந்த கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழலில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்த உதயநிதி தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்திடம் இருந்து வாழ்த்துக்களையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 194

0

0