சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி எப்போது..? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்!!

3 August 2020, 1:58 pm
movie_shooting 1- updatenews360
Quick Share

சென்னை : ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திரையரங்கு உரிமையாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, சினிமா படப்பிடிப்புகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதியளிக்கப்படும் பட்சத்தில் பொது இடங்களில் சூட்டிங் நடக்கும் போது, பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. ஆகவே, தற்போதைக்கு படப்பிடிப்புளுக்கு அனுமதி வழங்க முடியாது. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உள்அரங்கே போதுமானதாகும், எனக் கூறியுள்ளார்.

Views: - 8

0

0