மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!

Author: Aarthi Sivakumar
19 September 2021, 3:02 pm
Quick Share

சென்னை: சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

Maalaimalar News: Tamil News Chief Minister MK Stalin study in mega  vaccination camp

அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார். தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்திருந்தவர்களிடம் அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

Views: - 140

0

0