3 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் சைக்கிள் பயணம் : டீக்கடையில் தேநீர் அருந்தும் புகைப்படம் வைரல்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
25 September 2021, 11:09 am
Cm stalin cycling - updatenews360
Quick Share

சென்னை : கோவளம் – மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எதிர்கட்சி தலைவராக இருந்த போதில் இருந்து அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். வாரம் இருமுறையாவது கோவளம் முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் செல்வார். ஆனால், கடந்த 3 மாதங்களாக தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்ய வேண்டிய பணிகளால் சைக்கிள் பயணம் செய்வது தடைபட்டிருந்தது.

இந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். சைக்கிளிங்கிற்கு தேவையான உடைகளை அணிந்து, ஹெல்மெட் மற்றும் கையுறையுடன் மாமல்லபுரம் நோக்கி சென்ற அவரை வழிநெடுகிலும் பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களுக்கு சைக்கிள் ஓட்டியபடியே வணக்கம் தெரிவித்து சென்றார்.

இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் சாலையில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், அங்கிருந்தவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Views: - 133

0

0