கோவையில் இன்று 530 பேருக்கு கொரோனா! 364 பேர் டிஸ்சார்ஜ்!!

17 September 2020, 7:19 pm
MLA Corona- updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 530 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 364 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 500ஐ கடந்திருந்தது. அதன்படி, நேற்று 549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில், இன்று 530 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 234ஆக அதிகரித்துள்ளது.

3 பேர் பலி

கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.

364 பேர் டிஸ்சார்ஜ்

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 364 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 602 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 7

0

0