பத்திரிகையாளர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை : கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 7:34 pm
Cbe Collector Warn - Updatenews360
Quick Share

கோவை : பத்திரிகையாளர்கள் பெயருக்கு கலங்கப்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமிரன் எச்சரித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: நமது நாட்டின்‌ சட்டம்‌ இயற்றுதல்‌, நீதித்‌ துறை, நிர்வாகத்‌ துறை, என்பவை தூண்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும்‌, பத்திரிகை நான்காவது தூண்‌ என்று அழைக்கப்படுகிறது.

இந்தஅளவிற்கு முக்கியத்துவம்‌ வாய்ந்த பத்திரிகை துறையே அரசின்‌ திட்டங்களையும்‌, முக்கிய அறிவிப்புகளையும்‌ இன்னும்‌ பிற தகவல்களையும்‌ பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும்‌ ஊடகங்களாகவும்‌ செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில்‌ கடந்த சிலதினங்களுக்கு முண்‌ அன்னூர்‌ பகுதியில்‌ ஏற்பட்ட ஒரு விரும்பதகாத நிகழ்வின்‌ போது ஒரு சிலர்‌ முழுமையான நிகழவிள்‌ ஒளிப்பதிவிணை எடிட்‌ செய்து வெளியிட்டது மட்டுமின்றி, உண்மையை திரித்து பரப்பியதும்‌, பல்வேறு தாரப்பிணரிடையே குழப்பதையும்‌ தேவையில்லா பிரச்சனைகளையும்‌ ஏற்படுத்துவதாகவும்‌ அமைந்தது. குறிப்பிட்ட அந்த நபர் மீது குற்றவியல்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நடுநிலை தவறாமல்‌ செயல்பட்டு எளிய மக்களின்‌ நண்பணாகத்‌ திகழ்ந்து வரும்‌ பல்வேறு பத்திரிகையாளர்கள்‌ போற்றுதலுக்குரிய களப்பணியாற்றி வரும்‌ அதேவேளையில்‌, ஆங்காங்கே ஒருசிலர்‌ அரசு துறை அலுவலகங்களுக்கும்‌, தனியார்‌ நிறுவனங்களுக்கு நேரடியாகவும்‌, அலைப்பேசி வாயிலாகவும்‌ அழைத்து செய்தியாளர்கள்‌ என தெரிவித்து, சட்டத்திற்கு புறம்பான பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபடுவதுடன்‌, நேரங்காலம்‌ பார்க்காமல்‌ மக்கள்‌ நலன்‌ சார்ந்த செய்திகளை எடுத்துரைக்கும்‌ கண்ணியமிக்க பல்வேறு பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்துவதாகவும்‌, அவர்களின்‌ பெயருக்கு களங்கம்‌ கற்பிப்பதாகவும்‌, இதுதொடர்பான பல்வேறு முண்ணனி மற்றும்‌ முதுநிலை செய்தியாளர்களிடமிருந்து பல்வேறு புகார்கள்‌ தொடர்ந்து வரப்பெற்றுள்ள து.

அதனடிப்படையில்‌, இதுபோன்ற புகார்களின்‌ மீது நடவடிக்கை எடுத்திட செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலருக்கும்‌, காவல்‌ துறையினருக்கும்‌ அறிஉறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களும்‌ பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டிய தகவல்களை செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌ வாயிலாகவே வழங்கிட அறிவறுத்தப்பட்டுள்ளதுடன்‌, இதுபோன்ற பத்திரிகையாளர்கள்‌ எனக்கூறி தவறான செயல்களில்‌ ஈடுபடுவர்கள்‌ மீதான புகார்களை 9385214793 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல்‌ மற்றும்‌ மனுக்களை ஆதாரங்களுடன்‌ அளிக்கலாம்‌. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Views: - 262

0

0