நொய்யலில் பொங்கும் நுரை..! வலுத்து வரும் கோரிக்கை.!!
5 August 2020, 11:43 amகோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நொய்யல் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்ர் வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது நொய்யலில் நீத் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது. காற்றில் பறந்த நுரை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
நொய்யலில் சாயக்கழிவு தொடர்ந்து கலக்கப்படுவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0
0