நெல்லிதுறை பகுதிக்கு செல்ல முடியாமல் பாதியில் திரும்பிய கும்கி யானை: மாற்று திட்டம் குறித்து ஆலோசித்து வரும் வனத்துறையினர்

13 September 2020, 9:43 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையத்தில் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க உதவிக்கு வந்த கும்கி யானை பவானி ஆற்றில் நீரோட்டம் அதிகமானதால் நெல்லிதுறை பகுதிக்கு செல்ல முடியாமல்பாதியில் திரும்பி வந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான நெல்லித்துறை பகுதியில் காயம் அடைந்து சுற்றித் திரியும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர் குழு நியமிக்கப்பட்டு நாளை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. காயமடைந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மருத்துவர்களுக்கு உதவியாக கோவை சாடிவயல் முகாமிலிருந்து சுயம்பு என்ற கும்கி யானை மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கும்கி யானை சுயம்பு இறக்கப்பட்டு நெல்லிதுறை கிராமத்துக்கு நடத்திக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்

இழக்கப்பட்ட கும்கி யானை சுயம்பு பாலத்தின் மீது கொண்டு செல்ல முற்பட்டபோது கும்கி யானை கீழே உள்ள ஆற்று நீரின் ஆர்ப்பரிப்பு கண்டு பாலத்தின் மீது நடக்க எத்தனித்தது. இதனையடுத்து பாலத்திற்கு கீழ் பகுதியில் யானையை இறக்கி ஆற்றைக் கடந்து வெளிதுறை அழைத்து செல்ல முற்பட்டபோது பவானி ஆற்றில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. பில்லூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் மின் உற்பத்திக்காக திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே நீரோட்டம் அதிகமாக இருப்பதால் ஆற்றின் பாதி தூரம் வரை சென்ற கும்கி யானை சுயம்பு ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து யானையினால் மேற்கொண்டு நகர முடியாததால் யானை தத்தளித்து. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட யானையின் பாகன் ஒரு வழியாக போராடி யானையை மீண்டும் திருப்பி கரைக்கே கொண்டு வந்தார்.

கும்கி யானை காலத்தின் மீதும் செல்லாமல் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் யானையைப் பிடிக்க வனத்துறை மேற்கொண்ட முயற்சி தற்போது தடைபட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே கும்கி யானை நெல்லித்துறை பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் வனத்துறையினர் மாற்று திட்டம் குறித்து ஆலோசித்து வருகின்றனர். டாப்சிலிப் முகாமில் இருந்து மேலும் ஒரு யானை வரவுள்ள நிலையில் இரண்டு யானைகளும் ஒன்று சேர்த்து அழைத்துச் செல்ல வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0