தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு : ஜெட் வேகத்தில் சென்னை : இன்றைய நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2021, 9:07 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 1155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 1155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,48,045 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 603 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,03,799 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,776 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,470 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இன்று அதிகபட்சமாக சென்னையில் 589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக கோவையில் 70 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 206

0

0