பிரான்ஸ் – ராமேஸ்வரம்: சுற்றுலா பயணிக்கு கொரோனா உறுதி..!!

Author: Aarthi
12 October 2020, 12:41 pm
corona positive -updatenews360
Quick Share

பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேசுவரத்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுற்றுலா வந்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சில தினங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் வந்தனர்.

இந்நிலையில், அவர்களுள் 44 வயதான குடும்ப தலைவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், குடும்பத்தினர் அனைவரும் கடந்த 9ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் அந்த குடும்பத் தலைவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தை சேர்ந்த மற்ற அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 52

0

0