கொரோனாவுக்கு விஏஓ பலி! காஞ்சிபுரத்தில் சோகம்!!

25 August 2020, 12:41 pm
Corona VAO Dead- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : திருப்பெரும்புதூர் வட்டத்தில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
15 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. இது வரை மாவட்டத்தில் மொத்தம் 212 உயிரிழந்ததுள்ளனர்.

இதுவரை 13324 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2206 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்பத்தூர் வட்டம் மேவளுர்குப்பம் கிராமநிர்வாக அலுவலர் வி.மோகன் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சவீதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி பலியானார்.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஓ.எம்.மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மேலும் கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நோய்த்தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கொரோனாவிற்கு இதுவரை மூன்று அரசு ஊழியர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0