கோவையில் வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சிய நபர் கைது: 75 லிட்டர் ஊரல்கள் பறிமுதல்..!!

Author: Aarthi
26 July 2021, 7:27 pm
Quick Share

கோவை: சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் குக்கரில் சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வதம்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் வீட்டிலேயே கைத்தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது இரு்சக்கர வாகனத்தில் ஜே கிருஷ்ணாபுரம் பகுதியில் செல்லும் போது காமயாய்க்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்பொழுது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 6 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் சாராயம் காய்ச்சியதை ஒப்புக் கொண்டார். உடனடியாக காமநாய்க்கன்பாளையம் போலீசார் சுல்தான்பேட்டையில் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சுல்தான்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் உடனடியாக சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 75 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் அதற்குத் தேவையான மூலப் பொருள்கள் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் சாராயம் காய்ச்சியது தொடர்பாக தொடர்ந்து சுந்தர்ராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 215

0

0