களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம் : 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சரிடம் வழங்கினர்!!

9 May 2021, 10:37 am
CSK Helps- Updatenews360
Quick Share

சென்னை : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சிஎஸ்கே நிர்வாகத்தினர் முதலமைச்சரிடம் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் படு வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர். இதை தடுக்க தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் வரும் வாரத்தில் கூடுதல் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்படும் என சிஎஸ் கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிஎஸ்கே அணி நிர்வாக இயக்குநர் சீனவாசன் உள்ளிட்டோர் வழங்கினர்.

Views: - 189

0

0