லாவகமாக நெரிசலை கடந்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு…!!
Author: kavin kumar2 November 2021, 3:59 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸை சாமர்த்தியமாக ஓரடி உயரமுள்ள தடுப்புச் சுவரைத் தாண்டி நோயாளியை அழைத்துச் சென்ற சம்பவம் பாராட்டை பெற்று வருகின்றது.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சிவகுமார். பாகூரை சார்ந்த இவர் பாகூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் பாகூர் அரசு மருத்துவமனைக்கு எலி மருந்து சாப்பிட்டதாக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்த சிவகுமார் தனது ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளார். அப்போது 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனம் இயங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைஅறிந்து, தவித்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒரு கணம் கூட யோசிக்காமல் மனித உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு உதவியாளர் ஒருவரின் உதவியோடு சிறிய கற்களை வைத்து சுமார் 2 மீட்டர் நீளமும் ஒரு அடி உயரமும் உள்ள தடுப்பு சுவரை சாமர்த்தியமாக ஆம்புலன்ஸ் மூலம் கடந்து நோயாளியை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனை அங்கிருத்த ஒருவர் தனது மொபைல் போன் மூலம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். இது தற்போது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
1
0