பிரபல பிரியாணி கடையின் புதிய கிளை திறப்பு.. கொரோனாவை மறந்த மக்கள் : போக்குவரத்து பாதிப்பு!!

11 July 2021, 5:12 pm
Biriyani Hotel Crowd- Updatenews360
Quick Share

திருவள்ளூர் : பொன்னேரியில் புதியதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி கடையில் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று எஸ்.எஸ். ஹைதராபாத் தனியார் பிரியாணி கடை புதிய கிளை திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கடைகளில் கூட்டமாக சேரக்கூடாது என பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றி வரும் நிலையில் வழிமுறைகளை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரியாணி கடையில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

இதனால் கடையில் உள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் சாலையோரமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Views: - 125

1

0