தொடரும் பட்டியலின ஊராட்சிமன்ற தலைவி மீதான சாதிய தாக்குதல் : ஊராட்சிமன்ற அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு!!

29 October 2020, 3:52 pm
dalit leader protest - - updatenews360
Quick Share

மதுரையில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியை பணி செய்ய விடாமல் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தடுப்பதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மதுரை மேலக்கால் ஊராட்சி மன்ற தலைவியாக 10 மாதங்களாக பதவி வகித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த முருகேஸ்வரியை, ஊராட்சி மன்ற பணிகளை செய்ய விடாமல் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தடுப்பதாக கூறி முருகேஸ்வரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது ஜாதி பெயரை சொல்லி சக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் திட்டுவதுடன், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வரவிடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஊராட்சி மன்றம் சார்பில் கொண்டு வரப்படும் பணிகளுக்கான தீர்மானங்களில் கையெழுத்திட மறுப்பதால், மக்களுக்கான பணிகள் தேங்கி கிடப்பதால், தன்னை சுதந்திரமாக செயல்படாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டி ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்தார்.

Views: - 34

0

0