30 ஆண்டுகளாக ஆபத்தான பயணம் : பாலம் இல்லாததால் அபாயம்!!

5 November 2020, 7:23 pm
Danger Travel - Updatenews360
Quick Share

திருப்பூர் : கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அமராவதி ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் வாகனத்துடன் அபாய பயணம் மேற்கொள்ளும் கிராம மக்களின் அவரும் தொடர்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள குமாரசாமிக்கோட்டை,மாம்பாடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து புங்கந்துறை, சங்கரண்டாம்பாளையம், ஊதியூர் , காங்கயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பொது மக்கள் அமராவதி ஆற்றை கடக்க ஆற்றில் இறங்கி மணலில் வாகனத்துடன் ஆபத்தான பயணத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர்.

அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் தாராபுரம் தாலூகா மாம்பாடி, குமாரசாமிக்கோட்டை உள்ளிட்ட 10 சுற்று வட்டார கிராம மக்கள் ஆற்றின் மறுகரையில் உள்ள ஊதியூர், சங்கரண்டாம்பாளையம் பகுதிக்கு வர 15 கிலோமீட்டர் சுற்றி அக்கரைபாளையம் அல்லது பெரமியம் வழியாக செல்லவேண்டிய நிலை உள்ளது.

அதே நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில்,இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்லும் பலரும், ஆற்றில் வாகனத்தை இறக்கி மணலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில்,இதுவரை பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Views: - 22

0

0