தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது..!!

Author: Aarthi Sivakumar
16 August 2021, 10:20 am
Quick Share

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 13ம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் தமிழகத்தில் முதல் முறையாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. 4 நாட்கள் நடக்கும் விவாதத்தின் கடைசி நாளான 19ம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்கள் பதில் உரையாற்றுவார்கள்.

Views: - 300

0

0